இடுகைகள்

எனது படைப்புகள் தேடுவது மனித சுதந்திரத்தை மட்டுமே!

படம்
  தமிழில் வெளிவந்த இமையத்தின் முதல் நேர்காணல் ‘கோவேறுக் கழுதைகள்’ நாவலின் மூலமாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் எழுத்தாளர் இமையம். ‘ஆரோக்கியம்’ என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண் பாத்திரத்தை அந்நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். அடுத்ததாக ‘ஆறுமுகம்’ நாவலில் பாலியல் தொழிலாளரின் பிரச்சினைகளை பேசியிருந்தார். இப்போது ‘செடல்’ நாவலின் மூலமாக கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்ட ஒரு பெண் கூத்துக் கலைஞரின் அவல வாழ்க்கையை இலக்கியமாக்கி இருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் மிகமிக அடித்தட்டில் வாழ்கிற மக்களை  இலக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் திரு. இமையம் அவர்களை விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்... உங்கள் குடும்பப் பின்னணி, நீங்கள் கதாசிரியரான சூழல், அது பற்றி கூறுங்கள்... கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர்ங்கிற ஊரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அம்மா பேரு சின்னம்மாள், அப்பா வெங்கட்டன். ஆறு பேர் பிறந்தோம். நாலு பேர் இருக்கிறோம். என் பத்து வயசு வரைக்கும் மேல் ஆதனூர்லதான் இருந்தோம். பிறகு அம்மாவின் பிறந்த ஊரான கழுதூர்க்கு வந்தோம். ஆறு, ஏழு வயச

புரஸ்கார் விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞருக்குப் புகழஞ்சலி!

படம்
பொம்மலாட்டத் தந்தை கலைமாமணி டி.என்.சங்கரநாதன் (1926 - 2019) பு ரஸ்கார் விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி டி.என்.சங்கரநாதன் அவர்கள், கடந்த 2019 டிசம்பர் 28இல் காலமானார். 92 ஆண்டு காலம் நிறைவாழ்வு வாழ்ந்த அவர், தமது வாழ்வின் அறுபது ஆண்டு காலத்தை மரப்பொம்மைகளுடன்தான் கழித்தார். மரப்பொம்மைகளுடன் வாழும் வித்தையை தன் மனைவி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என குடும்பத்தினர் எல்லோரும் கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். கும்பகோணம் மகாமகக் குளத்தின் மேற்குப் பகுதியில், பழனியாண்டவர் சன்னதி தெருவில் உள்ளது டி.என்.எஸ், பிறந்து, இறுதி காலம் வரை வாழ்ந்த வீடு. நாகேஸ்வரன் கோயில் தெற்கு சந்து இறக்கத்தில் இறங்கியும் அவரது வீட்டுக்குச் சென்றடையலாம். 1926இல் சங்கரன் பிறந்தபோது, இவ்வீடானது சிறு ஓலைக் குடிசையாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் சாக்கடை  நீரோடியது.. தந்தை நன்னையன், நெசவுக் கூலித் தொழிலாளியாக இருந்தார். தாயார் நாமினியம்மாள் சுட்டுத் தரும் இட்லிகளை சங்கரன் எடுத்துச் சென்று விற்றுக் கிடைக்கும் காசுகளும் செலவுக்குத் தேவைப்படும் நிலையில் அந்தக் குடும்பத்தில் வறுமை சம்ம

பெண்ணியத்தை வாழ்க்கைதான் கற்றுக்கொடுத்தது : கவிஞர் சல்மா

படம்
தி ருச்சியிலிருந்து மதுரைக்குப் பயணிக்கும் நெடுஞ்சாலையில் 58 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது துவரங்குறிச்சி. அக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தலைவர் றொக்கையா. இவரின் இன்னொரு பெயர் ராசாத்தி. தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமான பெயர் சல்மா. சல்மா பிறந்தது, வளர்ந்தது, படித்தது, திருமணம் செய்து கொண்டது, பணியாற்றியது என சகலமும் இந்த துவரங்குறிச்சியில்தான். சம்சுதீன் - சர்புனிசா தம்பதியருக்கு 1968ல் பிறந்த சல்மாவின் பள்ளிப் படிப்பு ஒன்பதாம் வகுப்பு வரைதான். அந்தப் பகுதியில் இஸ்லாமியப் பெண்கள் வயதுக்கு வந்த பிறகு பள்ளிக்குச் செல்லவோ மேற்கொண்டு படிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. ஏன், வீட்டுக்குள் ஒரு பெண் இருக்கிற விசயமே வெளியில் தெரியக்கூடாதாம். அப்படி ஒரு கட்டுப்பாடு வீட்டுக்குள். அடங்கி ஒடுங்கி, தனிமையான சூழலில் (தொலைக்காட்சி வசதிகூட இல்லாத காலத்தில்) வார, மாத இதழ்களையும், கதைப் புத்தகங்களையும் படித்தே பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதானாம். சல்மாவின் பெரியப்பா மகன் அப்துல் ஹமீது (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) பக்கத்து வீடு. இருவரும் துணுக்குகள், ஜோக்குகள், எழுதி ‘ராணி’ போன்ற பத்தி

எழுத்தின் திசையில் எனது பயணம்: கவிஞர் சுகிர்தராணி

படம்
“பெண்ணின் உடலானது இதுவரை பெண்ணுக்குச் சொந்தமானதாக இல்லாமல், ஆணுக்குச் சொந்தமானதாகவே இருந்திருக்கிறது. அதனை அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்கிற நிலைதான் இருந்தது. இப்போதுதான், எங்களுடைய உடல் எங்களுக்குச் சொந்தமானது என்பதை உணரத் தொடங்கியுள்ளோம். உடல் விடுதலையைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறோம். அந்த விடுதலையை நோக்கித்தான் எனது எழுத்து இயங்கிக்கொண்டிருக்கிறது.’’ வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாலாபேட்டையில் ஓர் உரக்கம்பெனி கூலித் தொழிலாளியின் மகளாக 1972ல் பிறந்தவர் சுகிர்தராணி. அப்பா மூணாம் வகுப்பும், அம்மா ஆறாம் வகுப்பும் படித்த வர்கள். சுகிர்தராணிக்கு இரு அக்கா, ஒரு தங்கை. வருடத்துக்கு ஓர் உடைதான் உடுத்திக்கொள்ள. இன்னொரு உடைக்கு அடுத்த பண்டிகை வரை காத்திருக்க வேண்டிய வறுமையான குடும்பச் சூழல். பள்ளியில் எல்லாருடனும் சகஜமாகப் பழக முடியாத தீண்டாமைக் கொடுமை. வீட்டில் பொதுவாக சுதந்திரம் இருந்தாலும், பெண் மீதான கட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை. இவ்விதமாக, பள்ளி நாட்களிலேயே வறுமை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய மூன்றிலும் பாதி

மல்லாங்கிணறு கிராமத்தையே என் மனசு விரும்புகிறது: கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

படம்
“எனதூர்  கரிசல் மண்ணில் மல்லாந்து வட்டார மொழி சுழிக்க வடிவங்களின்  முகம் தொலைத்து நதிநீராய்  புரண்டோட வேணுமெனக்கு இலக்கின்றி’’ கரிசல் பூமியின் கவிச்சை மொழியில் கரிசல் மண்ணையும் மக்களையும் கவிதைகளாக்கிக் கொண்டிருப்பவர் கவிஞர் தமிழச்சி. இயற்பெயர் சுமதி. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள். அம்மா ராஜாமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழச்சியை கலை இலக்கியங்களை நேசிக்கிற பெண்ணாக உருவாக்கியதில் பெரும்பங்கு அவரது அப்பாவுக்கே உண்டு. முறைப்படி பரதநாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார்.  இலக்கியம் படிக்க விருப்பப்பட்டபோது ஊக்கப்படுத்தி படிக்கச் சொல்லியிருக்கிறார். எழுதத் தொடங்கிய காலத்தில் எதை எழுத வேண்டும், எப்படி எழுதவேண்டுமென்று நெறிப்படுத்தியவர் எல்லாமே இவரது அப்பாதான். தமிழச்சியின் முதல் கவிதை முயற்சி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படித்தபோது நிகழ்ந்திருக்கிறது. “ஓர் இலக்கிய மாணவிக்கு ஒரு ரசனைக்குரிய விசயமாக இருக்கிற மழை, விவசாயிக்கு எப்படியான மாறுபட்ட உணர்வைத் தருகிறது என்

அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும் - அ.வெண்ணிலா

படம்
“ நா ளைக்கும் பூமலரும் நாமிருக்க மாட்டோம்...’’ எனும் பாடல் வரிகள் எவ்வளவு வலியையும் ஆற்றாமையையும் தரக்கூடியதோ, அத்தகையதொரு வலியும் ஆற்றமையும் நிரம்பியது அ.வெண்ணிலா முதல்  கவிதை. “அடுத்த ஆண்டும் கொல்லையில் தேன்சிட்டு முட்டையிடும்... முட்டையை நேசப்பார்வையில் அடைக்காக்க நானிருக்க மாட்டேன். அருவருத்தாலும் நினைவில் அசையாமல் நின்றுபோன  அட்டையைக் கண்டலற நானிருக்க மாட்டேன். வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும் மழைநாள் இரவில் பேசித் தீர்க்க நானிருக்க மாட்டேன்... அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும் நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்...’’ திருமண வயதிலிருக்கும் எல்லா பெண்களுக்கும் தன் பிறந்த வீட்டைப் பிரிந்துபோகிற துயரம் இருக்கத்தான் செய்கிறது. அந்தத் துயரத்தை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார் வெண்ணிலா. இக்கவிதை ‘தீக்கதிர்’ இதழில் வெளிவந்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி - அம்மையம்பட்டில் 1971ல் பிறந்தவர் அ.வெண்ணிலா. அப்பா ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளர். பெரியாரின் ‘திராவிடர் கழக’த் திலிருந்து அண்ணாவின் ‘திராவிட முன்னேற்றக் கழக’த்திற்கு மாறியவர். அம்மாவோ தெய்வபக்தி மிக

இதத்தான் கவுத கவுதங்கிறியா நீ? - கவிஞர் இளம்பிறை

படம்
இ ராமநாதபுரம் பகுதியிலிருந்து பஞ்சம் பிழைக்க ‘அரிசிபடி’ ஆளாக கீழத் தஞ்சைப் பகுதிக்கு வந்தவர்களில் ஒருவர் சன்னாசி. இவருக்கு ‘வலிவலம் தேசிகர் பண்ணை’யில் தலையாரி வேலை. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவரின் மனைவி, பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பாம்பு கடித்து இறந்துவிட, ஆதமங்கலம் பண்ணையில் நடவு ஆளாக இருந்த கருப்பாயியைப் (அவரும் இராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க அரிசிப்படி ஆளாக வந்தவர்தான்) பேசி சன்னாசிக்கு இரண்டாம் தாரமாக, ஆதமங்கலம் பண்ணையிலேயே கல்யாணம் செய்து வைத் தார்கள். அவர்கள் இருவருக்கும் 1971-ல் பிறந்தவர்தான் கவிஞர் இளம்பிறை. ஐந்தாவது குழந்தையென்பதால் இவருக்கு ‘பஞ்சவர்ணம்’ என்று பெற்றோர் பெயர் வைத்தனர். ‘இளம்பிறை’ என்பது பின்னாளில் கவிதை எழுதுவதற்காக இவரே வைத்துக் கொண்ட புனைபெயர் . இவர்களின் குடும்பம் ‘வலிவலம்’ தேசிகர் பண்ணையில் சில வருடங்கள், ‘கொத்தங்குடி’ கிராமத்தில் சில வருடங்கள் என வசித்துவிட்டு, இறுதியில் ‘சாட்டியக்குடி’க்கு வந்து, அங்கே பண்ணையார் காட்டிவிட்ட ஓரிடத்தில் குடிசையைப் போட்டுக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்கள். பஞ்சவர்ணம் படித்தது, கவிதை எழுதத்