புரஸ்கார் விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞருக்குப் புகழஞ்சலி!

பொம்மலாட்டத் தந்தை கலைமாமணி டி.என்.சங்கரநாதன் (1926 - 2019) பு ரஸ்கார் விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி டி.என்.சங்கரநாதன் அவர்கள், கடந்த 2019 டிசம்பர் 28இல் காலமானார். 92 ஆண்டு காலம் நிறைவாழ்வு வாழ்ந்த அவர், தமது வாழ்வின் அறுபது ஆண்டு காலத்தை மரப்பொம்மைகளுடன்தான் கழித்தார். மரப்பொம்மைகளுடன் வாழும் வித்தையை தன் மனைவி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என குடும்பத்தினர் எல்லோரும் கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். கும்பகோணம் மகாமகக் குளத்தின் மேற்குப் பகுதியில், பழனியாண்டவர் சன்னதி தெருவில் உள்ளது டி.என்.எஸ், பிறந்து, இறுதி காலம் வரை வாழ்ந்த வீடு. நாகேஸ்வரன் கோயில் தெற்கு சந்து இறக்கத்தில் இறங்கியும் அவரது வீட்டுக்குச் சென்றடையலாம். 1926இல் சங்கரன் பிறந்தபோது, இவ்வீடானது சிறு ஓலைக் குடிசையாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் சாக்கடை நீரோடியது.. தந்தை நன்னையன், நெசவுக் கூலித் தொழிலாளியாக இருந்தார். தாயார் நாமினியம்மாள் சுட்டுத் தரும் இட்லிகளை சங்கரன் எடுத்துச் சென்று விற்றுக் கிடைக்கும் காசுகளும் செலவுக்குத் தேவைப்படும் நிலையில் அந்தக் குடும்பத்தில் வ...