ஆபாசத்தை விட வன்முறை மோசமானது : தியடோர் பாஸ்கரன் நேர்காணல்



S. Theodore Baskaran - Wikipedia


தியடோர் பாஸ்கரன், தமிழ்த் திரைப் பட ஆய்வாளர்களில் முக்கியமானவர். 1975ல் அலிகரில் நடந்த இந்திய வரலாற்று காங்கிரசில் ‘Film Censorship and Political Control in British India’ என்ற இவரது கட்டுரை இடம்பெற்று பரவலான கவனிப்பை பெற்றது. 1977ல் ‘Journal of Tamil Studies’ இதழில் வெளியான இவரது ‘Birth of a Medium Silent Cinema in South India 1880-1945’ சமூக அரசியல் கலை இலக்கிய ஆர்வலர் களுக்கு உதவும் மூலநூலாக அமைந் துள்ளது. 1996-ல் வெளிவந்த ‘The Eye of the Serpent : An Introduction of Tamil Cinema’ எனும் நூல், சிறந்த திரைப்பட நூலுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கத் தாமரை விருதைப் பெற்றது. 1996-ல் ‘தமிழ்ச் சினிமாவின் முகங்கள்’ வெளிவந்தது. 2003ஆம் ஆண்டு திரைப்பட தேசிய விருதுக் குழுவில் நடுவராகப் பணியாற் றினார். திரைப்படம் மட்டுமன்றி சூழலியல் கட்டுரைகளையும் அவ்வப்போது தமிழின் முக்கியமான இதழ்களில் இப்போது எழுதி வருகிறார்.

தாராபுரத்தில் பிறந்த தியடோர் பாஸ்கரன், சென்னை கிறித்துவக் கல்லூரி வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்திய அஞ்சல் துறையில் உயர் அதிகாரியாகப் பணி யாற்றியவர். சென்னை, திருவான்மியூரில் வசித்து வரும் இவரை, ஓர் அதிகாலையில் இவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்த் திரையுலகம் பற்றி உரையாடினோம்...

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு விசயமாக சினிமா இருக்கிறது. தமிழ் நாட்டு அரசியலைத் தீர்மானிக்கக்கூடிய சக்திகளுள் ஒன் றாகவும் சினிமா இருக்கிறது. மற்ற மாநில மக்களைக் காட்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமாவின் மீது அதிக ஈடுபாடு உண்டாகக் காரணம் என்ன?

அரசியலுக்கும் சினிமாவுக்கும் இருக்கிற ஈடுபாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகம். காரணம், சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டு சினிமா கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். முதலாவது, சினிமாவின் மூலம் தேசியக் கருத்துகளைப் பரப்புவது. இரண்டாவது, நடிகர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றவர்கள். ஆகவே, அவர்களை நேரடியாக தேசிய அரசியலில் ஈடுபடுத்துவது.

சத்தியமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா

இத்தகைய ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் மேயராகவும் இருந்த அவர், சவுத் இண்டியன் ஃபிலிம் சேம்பர் காமர்ஸுக்குத் தலைவராகவும் இருந்தார். திரைப்படத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதன் சக்தியை அறிந்தவர்.

About Great Actor Chitoor V. Nagaiah.

நடிகர் நாகையாவை கவுஹாத்தி காங்கிரசுக்குப் பிரதிநிதியாக அனுப்பினார். காங்கிரஸ் நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் எல்லோரையும் சுதந்திரப் போராட்ட அரசியலில் ஈடுபடுத்தினார்.

கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் ...

 கே.பி.சுந்தரம்பாள் காங்கிரசுக்காக 1937ல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 1958ல் சட்டமன்ற மேல்சபைக்குச் சென்றார். இந்தியாவிலேயே சட்டசபைக்குள் நுழைந்த முதல் சினிமா கலைஞர்களாகிய சக்தி, சரியான தலைமை இல்லாமல் இருந்தது.

CN Annadurai: How a Schoolteacher Became Tamil Nadu's First ...

அதன் பிறகு அந்த மாபெரும் சக்தியை அப்போதைய திராவிட இயக்கத் தலைவர்கள் உணர்ந்து பயன்படுத்திக் கொண்டார்கள்.
அந்த சக்தியை அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் தான் உணர்ந்தார்களே தவிர, பெரியார் சினிமாக்காரர்களைத்
தொடர்ந்து தாக்கிக் கொண்டுதானிருந்தார். சினிமாக் கலைஞர்களைக் “கூத்தாடிகள்’’ என்று இகழ்ந்த காமராஜரும்
1967தேர்தலில் சிவாஜி கணேசன் மற்றும் பல நடிகர்களின் உதவியைப் பெற்றதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
கருணாநிதி, அண்ணாதுரை, முரசொலி மாறன், சி.பி.சிற்றரசு, ஆசைத்தம்பி என பல தி.மு.க. தலைவர்கள் சினிமாவுக்கு வசனம் எழுதினார்கள். அந்தக் காலகட்டத்தில்தான், சினிமா தமிழ்நாட்டில் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகப் பரவி வந்து கொண்டிருந்தது.

கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி கொடுக்கிற பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டதும் அதே சமயத் தில்தான்.
மின்சாரமும் சினிமா பரவலும் ஒரே காலத்தில் நடந்ததாலே அதனுடைய தாக்கம் அதிகம் ஆனது. இது வரலாற்றுரீதியான காரணம். அடுத்ததாக, இந்தியாவிலேயே அதிகமாக திரையரங் குகள் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு. அதிகமாக சினிமா பார்ப் பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

இந்த மாதிரியான வரலாற்று ரீதியான காரணங்கள், வணிக காரணங்கள் இவை இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு நிலைதான் சினிமாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கிற பிணைப்பு.

திராவிட இயக்கத்தினர் சினிமாவை எவ்வாறு பயன் படுத்திக் கொண்டார்கள்?

திராவிட இயக்கம் சினிமாவை தங்களுடைய கருத்துகளைப் பரப்புவதற்கு அதிகமாக பயன்படுத்தவில்லை. தி.மு.க. சினிமா என்று அறியப்படுகிற வேலைக்காரி, நல்லதம்பி, பராசக்தி, திரும்பிப் பார்... இப்படியான படங்களிலெல்லாம் தி.மு.க. தலைவர்கள் வசனகர்த்தாக்கள் மட்டுமே. இயக்குநர் வேறு ஒருவர். திரையிலே என்னென்ன பிம்பங்கள் வரவேண்டும் என்பதை வசனகர்த்தா தீர்மானிக்க முடியாது.

என். எஸ். கிருஷ்ணன் - தமிழ் ...
‘நல்லதம்பி’ படத்தில் அண்ணாவின் வசனத்தை என்.எஸ்.கிருஷ்ணன் மாற்றியிருக்கிறார். அதனால் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பொதுவான புரட்சிகரமான, சீர்திருத்தக் கருத்துகளை சினிமா மூலம் பரப்பினார்களே தவிர, தி.மு.க. கட்சியின் கருத்துகளை அவர்கள் பரப்பவில்லை. ஆனால், சினிமா தரும் பிரபலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

கே.ஆர்.ராமசாமி திரைப்படங்கள் ...

திமுக.வுக்கு முதன்முதலாக மிகுந்த ஆதரவு தந்த நடிகர் கே.ஆர்.ராமசாமிதான்.

என்.எஸ்.கிருஷ்ணன் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தாரே தவிர, அவர் தி.மு.க. உறுப்பினர் கிடையாது. அவரை காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சியும் நடந்தது.

எம்.ஜி.ஆரின் முதல் காதல் ...


எம்.ஜி.ஆர்.தான் பெரிய அளவிலே தன்னுடைய புகழையும் பிரபலத்தையும் தி-.மு.க. பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தவர். அவரது ரசிகர் மன்றத்தினர் கட்சியின் நிழல்போல செயல்பட்டனர். எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அரசியல்ரீதியாக ஒரே கருத்து களைக் கொண்டிருந்தனர். அதனால்தான் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி ஆரம் பித்த உடனே அவரை ஆதரித்தனர்.

Shivaji Ganesan Songs - Play songs Online or Download mp3 on Wynk

ஆனால், அதே காலகட் டத்தில் செல்வாக்குடன் இருந்த சிவாஜிகணேசன் அப்படி இல்லை. அவர் 3000 ரசிகர் மன்றம் அமைத்து அவரும் அரசியலில் ஈடுபட்டார். அவரால் எந்தவித தாக்கமும் ஏற்படுத்த முடிய வில்லை. காரணம், அவருடைய சினிமா ரசிகர்கள் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால்தான் எம்.ஜி.ஆரைத் தவிர பிற சினிமாக் கலைஞர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுக்க முடியாமல் போய்விட்டது.

அரசியல் சினிமா என்றால் என்ன?

பிரெஞ்ச் இயக்குநர் ஒருவர் சொன்னார், ‘Making Political Cinema is differe from making politically’ என்று. அரசியல் சினிமாவில் உள்ளடக்கத்தில்தான் அரசியல் சித்தாந்தங்கள் அடங்கியிருக்கும். அதில் பாத்திரங்களின் பேச்சு மூலம் பிரசங்கம் செய்யவே தேவை இல்லை.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி in ...

குறிப்பாக, அவன் அமரன், தண்ணீர் தண்ணீர், அக்ரஹாரத்தில் கழுதை போன்ற படங்களைக் கூறலாம். சினிமா தன்மை களை நன்கு உணர்ந்து அதை படைப்பாக்கத்திற்குப் பயன் படுத்துபவர்களால்தான் அரசியல் சினிமாவை உருவாக்க முடியும்.

சினிமாவுக்கென்று ஒரு மொழி இருக்கிறபோது, ஏன் தமிழ்ச் சினிமாவில் நாடகத் தன்மையோடு இப்போதும் கூட கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

தமிழ்ச் சினிமாவின் ஆரம்பகாலமான 1,030களில் சுதந்திரப் போராட்டம் தீவிரமக இருந்தது. அப்போது எல்லாவித ஊடகங் களிலும் தணிக்கை முறை தீவிரமாக அமுலாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகாத கதைகளையே படமெடுத்தார்கள்.

‘டாக்கி’ பிறந்தபோது, 250க்கும் அதிகமான நாடகக் கம்பெனிகள் தமிழ்நாட்டில் இருந்தன. அவர்கள் நடத்திய வெற்றி கரமான நாடகங்களை அப்படியே படமாக்க ஆரம்பித்தார்கள். 1931லிருந்து 1941 வரை பத்தாண்டு காலத்தில் வருடத்திற்கு 30, 40 படங்கள் வரும். அதில் சமூகப்படங்கள் நான்கோ, ஐந்தோ தான் வந்திருக்கும். மற்றவை புராணப் படங்கள்தான். அந்தப் படங்களிலும் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளைத்தான் சொன்னார்கள். அதனால் மக்களுக்கு காட்சி பிம்பங்களின் மூலமாக கதை சொல்கிற நிர்ப்பந்தம் இவர்களுக்கு இல்லை. அதனாலேயே சினிமா மொழி வளரவே இல்லை. நாடக உத்தி களிலிருந்து இன்னும் முழு விடுதலை நமக்குக் கிடைக்கவில்லை. பேச்சு மொழியைவிட பிம்பங்கள் பலம் வாய்ந்தவை. நாம் காட்சிப் பிம்பங்களாகத்தான் கனவு காண்கிறோம். நாம் நினைப்பதும் பெரும்பாலும் காட்சி பிம்பங்களாகத்தான் வார்த்தைகளைவிட காட்சி பிம்பங்கள் நம் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால் பேச்சு மொழியின் மூலம்தான் இன்னமும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறோம். ரசிகர்களைப் பார்த்து நாடகம் நடத்துவது போல நம் சினிமாக்காரர்கள் கேமராவைப் பார்த்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னைதான் தென்னிந்தியாவின் சினிமா தலைநகரம். 1965 வரை வெளிவந்த எல்லா தென்னிந்திய சினிமாவும் சென்னையில் தான் உருவாகியிருக்கின்றன. மலையாள கன்னட சினிமா தனித்து ஆரம்பித்தபோது அவர்கள் சினிமாவின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் புரிந்து படமெடுக்க ஆரம்பித்தார்கள். அங்கு சினிமாவின் தரம் உயர்ந்திருப் பதற்கு அங்கே இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இருக்கிற தீவிர ஈடுபாடும் ஒரு முக்கிய காரணம். பல உன்னதமான இலக் கியங்களை அங்கு சினிமாவாக்கியிருக் கிறார்கள். அடுத்ததாக, முறைப்படி சினிமா கற்றவர்கள் சினிமாவை இயக்கி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
கன்னடத்திலும், மலையாளத்திலும் வருகிற சினிமாவைப் பார்க்க, ரசிக்க, விமர்சிக்க ரசனையுள்ள ஒரு பகுதி மக்கள் இருக்கிறார்கள். இங்கே அப்படி இல்லை.

எடுத்துக்காட்டாக, இதுவரை ‘மறுபக்கம்’ என்கிற ஒரே ஒரு படம்தான் 1992ல் இந்திய அளவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் படத்தை பார்ப்பதற்கோ, ரசிப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ தமிழ் நாட்டில் ஆட்கள் இல்லை.

Kollywood Editor B Lenin Biography, News, Photos, Videos | NETTV4U

அப்படியொரு படம் இருப்பதே பெரும்பாலானோருக்குத் தெரி யாது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே சிறந்த  இயக்குநராக பீ.லெனின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது ‘ஊருக்கு நூறு பேர்’ படத்தை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இப்படியான சூழலில்தான் தமிழ் சினிமாவின் தரம் தாழ்ந்திருக்கிறது.


தமிழ் மக்களின் சினிமா ரசனை வளரவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?

தமிழ்நாட்டு வெகுஜன பத்திரிகைகளில் சினிமா கலைஞர் களைப் பற்றிதான் அதிகமாக எழுதுகிறார்கள். சினிமா பற்றிய நல்ல கட்டுரைகள் மிக அரிதாகவே சிறுபத்திரிகைகளில் வருகின்றன.

தமிழ்நாடு பள்ளி கல்லூரிகளில் இலக்கியம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனாலே இலக்கியத்துக்குப் பரிச்சயமான ஒரு பெரிய மக்கள் திரள் உருவாகியிருக்கிறது. ஆனால், ஓவியம், புகைப்படம், சினிமா பற்றிய எந்த புரிதலையும் பாடத்திட்டம் தரவில்லை. ஆகவே, காட்சிப் பிம்பங்களை எதிர் கொள்ளும் திறன் பள்ளி வயதில் வளர்க்கப்படுவதில்லை.
தாமாகவே தேடி சினிமா ரசனையை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

2002ஆம் ஆண்டு அமெரிக்க மெக்சிகன் பல்கலைக் கழகத்தில் தென்னிந்திய சினிமா பற்றி வகுப்புகள் நடத்தினேன். எல்லா துறைகளிலிருந்தும் மாணவர்கள் வந்தார்கள். அவர்கள் எல்லோருக்குமே சினிமாவைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அகிர குரோசோவா, சத்யஜித் ரே படங்களை எல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இங்கே நாம் சினிமாவைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால், அரிச்சுவடியில் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது.

இலக்கியத்தில் உன்னதத்தை நாடும் நாம், சினிமாவில் அதை நாடுவதில்லை. சினிமாவை எதிர்கொள்ள எந்த முயற்சியும் தேவை யில்லை என்று நினைக்கிறோம்.

ஜான் அபிரகாம் ‘ஒடேசா’ என்ற அமைப்பின் மூலம் மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாகப் பெற்று ‘அக்கிர காரத்தில் கழுதை’ படத்தை எடுத்தார். அந்தப் படம் தேசிய விருது பெற்றது. அந்த மாதிரி முயற்சிகள் தமிழில் நடந்திருக்கிறதா? நடப்பதற்கான சாத்தியங்கள் உண்டா?

உன்னைப் போல் ஒருவன் – வெளிவராத ...

எனக்குத் தெரிந்து ஒரு முயற்சி நடந்திருக்கிறது. ஜெயகாந்தன் ‘ஆசிய ஜோதி பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நண்பர்களிடம் சிறுசிறு தொகையாக நிதிபெற்று தனது ‘உன்னைப் போல் ஒருவன்’ நாவலை சினிமாவாக எடுத்தார். இதில், தயாரிப் பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அவரால் இயங்கமுடிந்தது.

ஓர் இலக்கியவாதி தனது இலக்கியப் படைப்பைத் தானே இயக்கியதென்றால், பாலிவுட்டில் நார்மன் மெய் வலும், வுடி ஆலனும் செய்திருக்கிறார்கள். மலையா ளத்தில் எம்.டி.வாசுதேவநாயர் தனது ‘நிர்மால்யா’ நாவலை படமாக எடுத்தார். தமிழில் ஜெயகாந்தன் அப்படியொரு வரலாற்றை படைத்திருக்கிறார்.

thangar bachan slams || விழித்துக் கொள்வானா ...

தங்கர் பச்சான் பின்னர் செய்தார்.

மதவாத அரசியல் சக்திகளின் குறுக்கீடு, தமிழ்ச் சினிமாவை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது?

சினிமா வந்த காலத்திலிருந்தே இந்த மாதிரியான தலையீடுகள் இருந்து வந்திருக்கின்றன. சினிமா சக்தி வாய்ந்த ஊடகம்.


மறக்க முடியுமா... பராசக்தி - Marakka mudiyuma ...

அதில் புரட்சிகர கருத்துகளைப் பேசினால் குறுக்கீடு வருகிறது. ‘பராசக்தி’ வந்தபோது கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்கள்.  Demonstration  செய்தார்கள். ஆனால், அந்தப் படம் வெளிவந்து நன்றாக ஓடியது.

அக்ரஹாரத்தில் கழுதை – கதைச் ...


‘அக்கிரகாரத்தில் கழுதை’ தொலைக் காட்சியில் ஒளிபரப்புவதாக அறிவித்து கடைசியில் ரத்து செய்யப்பட்டது. ‘வாட்டர்’ படம் தயாரிப்பு அளவிலேயே நிறுத்தப்பட்டது.

25 years since 'Roja': Has the depiction of 'patriotism' on screen ...


‘ரோஜா’வை பால்தாக்கரே தான் பார்த்த பிறகுதான் வெளியிடணும் என்றார். இப்படி பல பாத கங்கள் சினிமாவுக்கு ஏற்பட்டிருந்தாலும், சமூகத்துக்குச் சாதகமான குறுக்கீடுகளும் பல சமயங்களில் நடந்து கொண்டுதான் இருக் கின்றன.

‘பாய்ஸ்’ போன்ற படங்களில் இடம்பெற்றுள்ள ஆபாசக் காட்சிகளுக்காகவும், ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படத்தில் இடம்பெற்ற இடஒதுக்கீடு சம்பந்தமான கதை வசனத்தை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.

நீங்கள் சென்சார்போர்டு உறுப்பினராக இருந்திருக் கிறீர்கள். சென்சார்போர்டு செயல்பாடுகள் பற்றி தமிழ்ச் சமூகத்திலே தொடர்ந்து குறைபாடுகள் சொல்லப்பட்டு வருகிறதே...?

சினிமாவின் தாக்கத்தையும், அதன் இயல்பையும், சாத்தியக் கூறுகளையும் புரிந்துகொண்டவர்கள்தான் சென்சார் போர்டு உறுப் பினர்களாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

நாம் செக்ஸ் காட்சிகளைப் பற்றி மட்டும்தான் கவலைப்படு கிறோம். ஆனால், அதற்கு மேலும் சில விசயங்கள் இருக்கின்றன. செக்ஸை விட வன்முறை மிகவும் மோசம். செக்ஸ் காட்சிகளைப் பார்க்கிற குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், குழந்தைகளுக்கு அந்த உணர்வு தீவிரமாக கிடை யாது. ஆனால், வன்முறையும் அதன் வலியும் குழந்தைகளுக்குத் தெரியும்.

தலையைத் துண்டிப்பது போலவும், குடலை உருவுவது போல வும் தமிழ்ச் சினிமா வருகின்றன. செக்ஸ் காட்சிகள் கூடாது என்பதில் நாம் காட்டுகிற அக்கறையை வன்முறை கூடாது என்பதிலும் காட்ட வேண்டும்.

தமிழ்ச்சினிமா பற்றிய திறனாய்வு எவ்வாறு இருக்கிறது?

Buy Suvadukal - Thirai Vamarsana Thoguppu Part 1 ...

கடந்த பத்து வருடங்களில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, அம்சன்குமார், எம்.சிவகுமார், ராமசாமி, சாருநிவேதிதா, அசோகமித்திரன் போன்ற பலர் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவுக்கென்று சில இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் நல்ல அறிகுறிதான். ஆனால், இம்முயற்சிகள் பரவலாக இல்லை.

சினிமாவை அது சாமான்யனுக்கான சாதனம், அதை சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்கிற மாதிரியான மனப்பான்மைதான் நம்மிடம் இன்றும் இருக்கிறது.

சினிமாவை அறிந்து கொள்வதற்கு, தமிழில் வெளி வந்துள்ள முக்கியமான புத்தகங்கள்?

1950களில் இருந்த தமிழ் சினிமா சூழலைச் ...

எனக்கு முதலில் ஞாபகம் வருவது பி.எஸ்.ராமையா எழுதிய ‘சினிமா’. இதில் சினிமாவின் அடிப்படை கோட்பாடுகள், தன்மைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இப்புத்தகம் அண்மையில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. அம்சன்குமார் எழுதிய ‘சினிமா ரசனை’, மற்றுமொரு முக்கியமான நூல் எம்.சிவகுமார் தமிழாக்கம் செய்த பேலபெலாஸின் ‘சினிமா கோட்பாடு’, எம்.சிவகுமாரின் ‘சினிமா ஒரு அற்புதமொழி’, பீர் முகமது எழுதிய ஒரு நூல் (பெயர் ஞாபகத்தில் இல்லை), மகேந்திரனின் ‘சினிமாவும் நானும்’ ஆகியவை நான் படித்த அளவில் சிறந்த நூல்கள்.

சந்திப்பு : சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது 
அக்டோபர் 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை