கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை

மணிமுத்தா ஆறு என் அம்மா
என் எழுதுகோல் வழியே அவள்தான்
இப்போதும் சுரந்து கொண்டிருக்கிறாள்.
எப்போதும் அவளே சுரப்பாள். ஆம்!
ஆறுகள் நனைக்காத எழுத்தில்
நிலா விதைக்க முடியாது
நிலா விதைக்க முடியாத எழுத்தில்
மீன்கள் தெறிக்காது.
மீன்கள் தெறிக்காத எழுத்தும் எழுத்தாமோ’’
என தனது எழுத்தின் ஊற்றுக்கண்களையும், வேர்களையும் கூறும் கவிஞர் அறிவுமதி, இன்று தமிழுலகம் நன்கு அறிந்த திரைப்படப் பாடலாசிரியர்.
தமிழ் மண்ணின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தீராத காதல் கொண்டவர். தமிழின விடுதலைக்காக எழுதியும் பேசியும் போராடி வருகிறார். திரைப்படத் துறையில் கால் பதித்து ‘நறுமுகையே, நறுமுகையே’, ‘முத்தமிழே முத்தமிழே’ என வளமான தமிழ்ச் சொற்களாலான திரைப்படப் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.
சென்னை, தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்...
தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே...?
விருதுகள் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை கிடையாது.
இருந்தாலும், பத்து கவிதைத் தொகுதிகள் எழுதியும் என் தமிழ் மக்களுக்கு அறியப்படாத நான், திரைப்படப் பாடல் மூலம் எப்படி ‘நம்ம அறிவுமதி’ என்று அறிமுகமானேனோ அப்படி இந்த விருது என்னை மேலும் என் மக்களிடம் அறிமுகப்படுத்த உதவும் என்கிற வகையில் மட்டும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
ஒரு சிறு கிராமத்தில் பிறந்த நீங்கள், திரைத் துறைக் குள் எப்படி நுழைந்தீர்கள்? சிறந்த பாடலா சிரியருக்கான விருது பெறும் அளவிற்கு எவ்விதமாக வளர்ந்தீர்கள் என்பதை உலகத் தமிழர்களுக்குக் கூறுங்களேன்...
தென்னாற்காடு மாவட்டம், விருத்தாசலம் அருகில் மணிமுத்தா நதிக்கரையில் ஒரு சின்னஞ்சிறு ஊர் ‘க.கீணனூர்’. நதிக்கரையில் இருந்தாலும் புஞ்சை நிலங்களால் ஆன வாழ்க்கைச் சூழல். வேளாண்மைத் தொழில். அந்தப் புஞ்சைக் காட்டு மக்களோடு மக்களாக பிறந்து வளர்ந்தேன்.
கவிதை என்பது உள்ளே ஊறுகிற ஊற்று. புஞ்சைக் காட்டுப் பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கவிஞர்கள் தாம். பிறந்த குழந்தையைக் காலில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவர்கள் பாடும் தாலாட்டு, ஏர் ஓட்டும்போது, களையெடுக்கும்போது, வண்டியோட்டும்போது, மரணத்தின்போது... இப்படி அவர்களின் வாழ்க்கை முழுவதும் கவிதைகளாகவே பூத்துப் பூத்துக் கொத்துக் கொத்தாய்க் குலுங்கி உதிரும் மரபிலே வந்தவன் நான்.
அந்த மரபிலேயும் அப்பா எழுத்துத் தமிழுக்கு வந்து விட்டார். அவர், திமுக கிளைச் செயலாளராக இருந்தார். திராவிட நாடு, நம் நாடு, தென்னகம், திராவிடன், முத்தாரம், முரசொலி, கலைமன்றம், தென்றல் போன்ற ஏராளமான இதழ்களை அப்பா வாங்கி வருவார். உயரமான சிம்னி விளக்கொளியில் விடிய விடிய படித்துக் கொண்டிருப்பார். நான் என் பாடங்களைப் படித்து முடித்த பிறகு அந்த இதழ்களை படிப்பேன். தி.மு.க. கிளைக் கழகக் கொட்டகையைத் திருவள்ளுவர் படிப்பகமாக நடத்தினார்கள். அதில் ஏராளமான நல்ல நூல்கள் இருந்தன. அவற்றையும் படிப்பேன்.
அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவரிடமிருந்து நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் எனக்குக் கவிதை மரபு கிடைத்திருக்கிறது. அப்பாவிடமிருந்து எழுத்துத் தமிழும் அரசியலும் அறிமுகமாகின்றன.
பள்ளிக்கூடத்துக்கு ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் தூரம். கம்பு, வேர்க்கடலை... இவையெல்லாம் விளைந்திருக்கும். கொட்டைமுத்துச் செடியிலே பச்சைப் பயித்தங்காய் ஏறிப் பூத்துக் காய்த்துத் தொங்கும். அவற்றின் நடுவிலேதான் நான் பள்ளிக்குப் போய் வருவது. போகும்போது மனதில் தோன்றியதை யெல்லாம் பாடிக்கொண்டே செல்வேன். வீட்டுக்குத் திரும்பும்போது மாணவர்களை எல்லாம் முன்னே நடக்கவிட்டு, நான் மட்டும் அந்தி வானத்தைப் பார்த்தபடி அந்தக் காட்டு வெளியில் குருவிகளின் இசையுடன் நாட்டுப்புறத் தாயும் தந்தையும் என்ன மாதிரியான பாடலைப் பாடுவார்களோ, அப்படி மனதில் தோன்றியதையெல்லாம் பாடிக்கொண்டு வருவேன்.
எழுதப் படிக்க ஆரம்பித்த பிறகு, ஆற்றங்கரையில் வீரனார் கோயிலுக்கு அருகில் உள்ள காட்டு நாரத்தங்காய் மரநிழலில் அமர்ந்து, குலேபகாவலி, மர்மயோகி, நாடோடி மன்னன் போன்ற திரைப்படப் பாடல் மெட்டுக்குத் தி.மு.க. பிரச்சாரப் பாடல்கள் எழுதிப் பழகியிருக்கிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கிற போதுதான் சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், புதுக் கவிதைகள் போன்றவை படிக்கக் கிடைத்தன. மீராவின் ‘கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்’, மு.மேத்தாவின் ‘கண்ணீர் பூக்கள்’, நா.காமராசனின் ‘கருப்பு மலர்கள்’ போன்ற கவிதைத் தொகுதிகளும், வானம்பாடி, தீபம், கணையாழி, கண்ணதாசன், மனிதன் போன்ற இதழ்களில் வரும் கவிதைகளும் எனக்குள் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கின. சிறந்த தமிழாசிரியர்களிடம் தமிழ்ப் படிக்கிற வாய்ப்பு அங்கு கிடைத்தது.
ஆக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மிகச்சிறந்த இலக்கியச் சூழல்தான் என்னைப் பொதுவுடைமை, பகுத்தறிவு சார்ந்த இலக்கியவாதியாக வளர்த்தெடுத்தது.
ஆரம்பத்தில் சில துணுக்குக் கவிதைகளை எழுதினேன். அவற்றை தீபம், கணையாழி இதழ்களுக்கு அனுப்பினேன். கணையாழியில் சில கவிதைகள் வெளிவந்தன. அதைப் படித்துவிட்டு என் பேராசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கவிதைப் போட்டிகளில் ஏராளமான பரிசுகளைப் பெற்றேன். அதனால் நிறைய அறிமுகம் கிடைத்தது.
சென்னைக்கு வந்தபிறகு கவியரங்குகள், வானொலியில் இளையபாரதம்... இதனாலெல்லாம் அதிக அறிமுகம் கிடைத்தது.
முக்கியமாக, சோவியத் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட புஷ்கின் இலக்கியப் பேரவை மூலம்தான் வைரமுத்து, நான், பழநிபாரதி, அறிவுமணி ஆகியோர் வளர்ந்தோம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டு கவியரங்கத்தில் பங்கேற்றேன். என் கவிதையை எங்கேயோ நின்று கேட்டுக் கொண்டிருந்த கவிஞர் மீரா அண்ணன் என்னைத் தேடி வந்து பாராட்டி, என் கவிதைகளை ‘அன்னம்’ மூலமாக வெளியிடக் கேட்டார். அதுதான் ‘நிரந்தர மனிதன்’ தொகுதியாக வெளிவந்தது.

அவரது நண்பரான கவிஞர் அப்துல் ரகுமான் அப்போது வாணியம்பாடியில் ‘கவிராத்திரி’ நடத்திக் கொண்டிருந்தார்.
அப்துல் ரகுமான்தான் உலகக் கவிதைகள், ஹைகூ, கஜல் போன்ற எல்லா வகையான கவிதைகளையும் எனக்கு அறிமுகப்படுத்தி, கவியரங்கக் கவிஞனாக இருந்த என்னை மேலும் ஆழமான தளத்துக்கு அழைத்துச் சென்றார்.
கவியரங்கக் காலத்தில் உங்களுக்கும், வைரமுத்து, பழநிபாரதி ஆகியோருக்கும் திரைப்படத்தில் பாடல் எழுதும் கனவு இருந்ததா?
எங்கள் மூவருக்குமே திரைப்படத்துக்குப் பாடல் எழுதும் எண்ணம் அப்போது கிடையாது. கவியரங்கங்களில் கவிதை வாசிப்பதுதான் எங்களின் அப்போதைய சூழலாக இருந்தது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்து விட்டு பேராசிரியராக ஆகவேண்டும் என்பதுதான் என் வாழ்க்கைச் சூழலாக இருந்தது.
அதேபோல, வைரமுத்து சட்ட மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் ஓர் இசையமைப்பாளர் இருந்தார். அவரிடம் கடுமையான பயிற்சி எடுத்து எல்லா மெட்டுகளுக்கும் எழுத முடியும் என்கிற சூழ்நிலையில்தான் அவர் பாட்டு எழுதத் தொடங்கினார்.

பழநிபாரதி பத்திரிகைச் சூழலில் இருந்தார்.
பிறகு, நீங்கள் எப்படி திரைப்படத் துறைக்குள் நுழைந்தீர்கள்?
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும்போது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ திரைப்படத்தை ‘மிட்லேண்ட்’ திரையரங்கில் முதல் காட்சி பார்த்தேன். படம் மிகவும் பிடித்துவிட்டது. பேருந்துக்கு வைத்திருந்த காசைக் கொடுத்து, இரண்டாம் காட்சியும் பார்த்துவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்தேன்.
அதுவரை வேறெந்த படமும் ஏற்படுத்தாத அப்படியொரு அதிர்வை எனக்குள் அந்தப் படம்தான் உருவாக்கியது. நான் எந்தப் புஞ்சைக் காட்டில் பிறந்து வளர்ந்தேனோ அந்த வாழ்க்கையை, கருவேலங் காட்டிலே ஆடு மேய்க்கிற ஒரு கிழவி கதை சொல்கிற மாதிரி, அங்கிருந்து வந்த ஒரு மனிதன் சொல்லியிருக்கிறான். இளையராஜாவின் இசையும் என் மக்களின் இசையாக இருந்தது.
இதன் மூலம் நாமும் ஒரு படைப்பாளனாய் இருந்து திரைப்படத் துறையில் உருவாக முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்கியவர் பாரதிராஜாதான்.

அடுத்ததாக ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தைப் பார்த்து மிகவும் வியப்படைந்து பதினாறு பக்கங்களுக்குக் கவிதையிலேயே விமர்சனம் எழுதி, பாரதிராஜாவை நேரே போய்ப் பார்த்துக் கொடுக்க கூச்சப்பட்டுக் கொண்டு, அஞ்சலில் அனுப்பினேன். அவர் அதைப் படித்துவிட்டு, எல்லோரிடமும் காட்டி வியந்திருக்கிறார்.

இதற்கிடையில், கே.பாக்யராஜின் முகவரி ஒரு நண்பர் மூலமாக எனக்குக் கிடைத்தது. அவருக்கு மடல் எழுதினேன். அவரும் எனக்கு மடல் எழுதினார். இப்படியாக, மடலின் மூலம் தொடர்பு கொண்டிருந்தோம். அவர் தனது ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்துக்கு உதவி இயக்குநராக என்னை அழைத்தார். எனக்கு அப்போது வறுமைச் சூழல். ஏதாவது பிடிமானம் தேவை என்பதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வை விட்டுவிட்டு திரைப்படத் துறைக்கு வந்துவிடுகிறேன். சுவரில்லா சித்திரங்கள், ஒரு கை ஓசை, பாமா ருக்மணி, இளமைக் கோலங்கள் ஆகிய படங்களுக்கு அவரிடம் திரைக்கதை, உரையாடல் தளங்களில் பயிற்சி எடுத்து வளர்ந்து கொண்டிருந்தேன்.

பாலுமகேந்திராவிடம் நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், வீடு, சந்தியா ராகம், யாத்ரா போன்ற திரைப்படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றினேன்.
பாரதிராஜாவிடம் புது நெல்லு புது நாத்து, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், நாடோடித் தென்றல் போன்ற படங்களில் பணி யாற்றினேன்.
‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ‘கலைப்புலி’ தாணு அண்ணனின் உறவு கிடைத்தது. அவருடைய ‘சிறைச்சாலை’ படத்துக்கு உரை யாடலும் பாடலும் எழுத அழைத்தார். அந்தப் பாடல்கள் மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தின.
அதற்கு முன் பல பாடல்கள் எழுதியிருந்தாலும், ‘சிறைச்சாலை’ வெற்றிக்குப் பிறகுதான் என்னை ஒரு பாடலாசிரியராக தமிழ்நாடு அடையாளம் கண்டது. இசைப் பாடல்களில் எனக்கு முன்னோடியாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி ஆகியோரைப் பார்க்கிறேன். கவிதை முன்னோடியாக பாரதியார். அவர், தான் நினைத்த தேசிய அரசியலில் வாழ்க்கைப் பிறழாமல் கவிதைக்கும் பயன்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன். இப்போது இன்குலாப்.
பாரதி, பாரதிதாசன் இவர்களின் தொடர்ச்சியாக...?
பாரதி, பாரதிதாசன் என்று வரிசைப்படுத்தி மற்றவர்களைப் புறக்கணிப்பது தவறு. சங்க இலக்கியத்தில் மிகச்சிறந்த கவிதைகளைத் திரட்டி அகநானூறு, புறநானூறு என்று தொகுத்தோமே, அதுபோல தொகுக்கிற காலம் இது. எங்களைவிட இப்போது புதிதாக எழுத வந்திருக்கிற தம்பிகள் தங்கைகள் சிறப்பாகவே எழுதுகிறார்கள். ஒவ்வொரு கவிஞரும் தமிழுக்கும் தமிழ்க் கவிதைக்கும் தமிழ் இசைப் பாடலுக்கும் எவ்வாறு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, எண்ணிக்கை முக்கியமே இல்லை.
இசைப் பாடலில் வைரமுத்துவாகட்டும், நானாகட்டும், பழநிபாரதியாகட்டும் தலைகவிழ்ந்துதான் நிற்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் பெண்களைக் கொச்சைப்படுத்தி, பிற மொழிச் சொற்களைக் கலந்து பிறருக்கு ஆட்பட்டு எழுதிய பாடல்தான் நிறைய. இதற்குள் இலக்கியம் சாதித்துவிட்டேன் என்று பேசிக்கொள்ளலாமே தவிர, தன்மானத்தோடு யார் இசைப் பாடல்கள் எழுதினார்கள் என்பதைத்தான் வரலாறு கவனிக்கும்.

இன்றைக்கு உலகம் முழுவதும் தேனிசை செல்லப்பாவின் குரலில் காசி ஆனந்தனின் பாடல்கள்தாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்கிற உண்மையை எல்லோரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் சாதிய சிந்தனைகளும், வட்டார வழக்கு மனப்பான் மையும் வலுத்து வருவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இப்போது இத்தனைச் சாதிகளென, கிளர்ச்சிகள் என அடையாளப்படுத்துவதுகூட நாளைக்கு இவர்கள் ஒன்றுபடுவதற்காகத்தானே தவிர, பிரிவதற்காக அன்று. சாதியின் கடைசி காலகட்ட அடையாளம் இது. அடிமைப்பட்ட ஒவ்வொருவனும் எழுந்து தனது அடையாளத்துக்காக மோதி, நாம் எல்லோரும் அண்ணன் தம்பிதான் என்று உணருகிற காலகட்டத்தில்தான் வட்டார வழக்கு இலக்கியங்களுக்கு ஒரு தேவை இருக்கிறது.
பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் போன்றவர்களை முன்னுதாரணமாக வைத்து எழுதிக் கொண்டிருந்த வரையிலும் அந்தக் கவிதைகளின் பாடுபொருள் தனிமனித பலகீனச் சிந்தனைகளை உள்வாங்கிய தாகத்தான் இருந்திருக்கின்றன. போராட்டத்துக்கான உந்துசக்தி அதில் கிடையாது.

‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்று சொல்கிற காலகட்டமாக நாங்கள் கவிதைகளில் வருகிறோம்.
பழமலயின் ‘சனங்களின் கதை’, கரிகாலனின் ‘புகைப்பட மனிதன்’, புகழேந்தியின் ‘மண் கவிச்சி’, கண்மணி குணசேகரனின் ‘தலைமுறைக் கோபம்’, இளம்பிறையின் ‘சப்தங்கள்’, என்.டி.ராஜ்குமாரின் ‘தெறி’, ‘ஒடக்கு’, என்னுடைய ‘மணிமுத்தா நதிக் கரையில்...’ இப்படியான சிறந்த கவிதைத் தொகுதிகள் முன்னுதாரணங்களாக வந்து கொண்டிருக்கின்றன.
இலங்கைத் தமிழ்ப் படைப்புகள் பற்றி?
இனவிடுதலைக்காக துப்பாக்கி ஏந்திப் போராடுகிற போராளிகள், அதே கைகளால் கவிதைகளும் எழுதுகிறார்கள். ஆயுதம் ஏந்துகிற போராட்ட காலகட்டத்திலேயே வதைக்கப்பட்ட மாவீரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
வானதி, பாரதி, கஸ்தூரி என மூன்று பெண் போராளிகள். அந்த மூவருமே இப்போது இல்லை. ஆனால், அவர்களின் கவிதைத் தொகுதிகள் இருக் கின்றன. சங்க இலக்கிய வீரத் தாய்களைவிட இவர்கள்தாம் எனக்கு வீரத்தாய்களாகத் தெரிகிறார்கள். ஔவையார்கூட போராடிய மன்னர்களுக்கு இடையே ஊடாடி வாழ்ந்தாரேயன்றி, போராட்டக் களத்தில் போராடியவரில்லை. பெருமைமிகு தமிழ் இன வரலாற்றில் அவர்களைத்தாம் பெருமை செய்ய விரும்புகிறேன்.
சந்திப்பு : சூரியசந்திரன்
இன்தாம் இணையம்,
2002
கருத்துகள்
கருத்துரையிடுக