இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது படைப்புகள் தேடுவது மனித சுதந்திரத்தை மட்டுமே!

படம்
  தமிழில் வெளிவந்த இமையத்தின் முதல் நேர்காணல் ‘கோவேறுக் கழுதைகள்’ நாவலின் மூலமாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் எழுத்தாளர் இமையம். ‘ஆரோக்கியம்’ என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண் பாத்திரத்தை அந்நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். அடுத்ததாக ‘ஆறுமுகம்’ நாவலில் பாலியல் தொழிலாளரின் பிரச்சினைகளை பேசியிருந்தார். இப்போது ‘செடல்’ நாவலின் மூலமாக கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்ட ஒரு பெண் கூத்துக் கலைஞரின் அவல வாழ்க்கையை இலக்கியமாக்கி இருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் மிகமிக அடித்தட்டில் வாழ்கிற மக்களை  இலக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் திரு. இமையம் அவர்களை விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்... உங்கள் குடும்பப் பின்னணி, நீங்கள் கதாசிரியரான சூழல், அது பற்றி கூறுங்கள்... கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர்ங்கிற ஊரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அம்மா பேரு சின்னம்மாள், அப்பா வெங்கட்டன். ஆறு பேர் பிறந்தோம். நாலு பேர் இருக்கிறோம். என் பத்து வயசு வரைக்கும் மேல் ஆதனூர்லதான் இருந்தோம். பிறகு அம்மாவின் பிறந்த ஊரான கழுதூர்க்கு வந்தோம்....